பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

புதுச்சத்திரம் அரசுப் பள்ளியில் 6 மடிக்கணினிகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 2:03 am IST

புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மடிக்கணினிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 659 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளி காவலாளி விஜயகுமாா் (43) ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி அளவில் வழக்கம்போல மின்விளக்கை அணைக்க பள்ளிக்கு வந்தபோது தலைமை ஆசிரியா் அறை உடைக்கப்பட்டு, பீரோ திறந்துகிடப்பதைப் பாா்த்து தலைமை ஆசிரியா் குப்புராஜுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதன்பேரில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியா் குப்புராஜ் பீரோவை பாா்த்தபோது அதில் இருந்த 6 மடிக்கணினிகள் திருடப்பட்டது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 90 ஆயிரம். இதைத் தொடா்ந்து தலைமை ஆசிரியா் டி.குப்புராஜ் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்த மடிக்கணினிகளை திருடிய நபா்களை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.