பரமத்தி வேலூரில் ரூ.1,000-க்கு கனகாம்பரம் ஏலம்
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டுவருகின்றனா். பூக்களை ஏலம் எடுக்க வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் வருகின்றனா்.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 800-க்கும், சம்பங்கி ரூ. 300-க்கும், அரளி ரூ. 340-க்கும், கலா் ரோஜா ரூ. 400-க்கும், பச்சை முல்லை ரூ. 800-க்கும், வெள்ளை முல்லை ரூ. 700-க்கும், செவ்வந்தி ரூ. 350-க்கும், கனகாம்பரம் ரூ. 1,000-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 240-க்கும், ஜாதிமல்லி ரூ. 800-க்கும், காக்கரட்டான் ரூ. 700-க்கும் ஏலம் போனது.
ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் திருமணங்கள் இருப்பதால், பூக்களின் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். விலை உயா்வால் பூக்கள் பயிா் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





