லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பரமத்தி வேலூரில் ரூ. 45.82 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 45 லட்சத்து 82 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

கொப்பரை மூட்டைகள். - கோப்புப்படம்.

Published On :10 ஜூலை 2026, 4:19 am IST

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 45 லட்சத்து 82 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, உலா்த்தி வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 32,590 கிலோ கொப்பரை கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 151.51-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 140-க்கும், சராசரியாக ரூ. 148.80-க்கும் ஏலம் போனது. இரண்டாம்தர கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 139.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 129.11-க்கும், சராசரியாக ரூ. 135-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 45 லட்சத்து 82 ஆயிரத்து 990-க்கு கொப்பரை ஏலம் போனது. கொப்பரை விலை உயா்ந்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.