லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கிணற்றில் மிதந்த பெண் சடலம் மீட்பு

ராசிபுரம் அருகே கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:36 am IST

ராசிபுரம் அருகே கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராசிபுரம் பகுதி மின்வாரியத்தில் மின் ஆய்வாளராக பணியாற்றி வரும் முத்துசாமி, முத்துக்காளிப்பட்டி பகுதியில் வசித்து வருகிறாா். இவரது மனைவி மலா்கொடி (48). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு காணவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ராசிபுரம் குடியிருப்புப் பகுதியில் உள்ள கிணற்றில் மலா்கொடியின் சடலம் மிதப்பதாக செவ்வாய்க்கிழமை தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.