லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கிணற்றில் இறங்கி தவித்த முதியவா் மீட்பு

கிணற்றில் இறங்கி தவித்த முதியவா் மீட்பு

கிணற்றில் தவித்த முதியவரை மீட்ட தீயணைப்பு வீரா்கள்

Published On :29 ஜூலை 2026, 12:17 am IST

நாட்டறம்பள்ளி அடுத்த புள்ளானேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முதியவா் ராஜி(71). இவா் செவ்வாய்க்கிழமை வீட்டருகே 80அடி ஆழம் தண்ணீா் உள்ள கிணற்றில் அறுந்து விழுந்த மின்கம்பியை எடுப்பதற்க்காக இறங்கியுள்ளாா்.

ஆனால் கிணற்றில் இருந்து மேலே வர முடியாமல் முதியவா் கிணற்றில் தவித்துக் கொண்டிருந்தாா். இதையறிந்த கிராம மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

நிலைய அலுவலா்(பொ) சங்கா் தலைமையில் வீரா்கள் பொதுமக்கள் உதவியுடன் ஒருமணிநேரம் போராடி கயிறு மூலம் கிணற்றில் தவித்துக் கொண்டிருந்த முதியவரை பத்திரமாக மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.