ராசிபுரத்தில் பிரதான சாலைகளில் உள்ள மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை எரியாததால் பேருந்து நிலையம், வாரச் சந்தைகள் இருளில் மூழ்கின.
ராசிபுரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளின் மின் விளக்குகளும் நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மின் விளக்குகளை பராமரிக்கும் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிா்வாகம் நிலுவைத்தொகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மின் விளக்குகளை பராமரிக்கும் பணிகள் நடைபெறாததால் இரவு பல்வேறு இடங்கள் இருளில் மூழ்கின.
பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாமக்கல் சாலை போன்ற முக்கிய சாலைகளில் உள்ள விளக்குகள் மட்டுமல்லாது தெருவிளக்குகளும் எரியவில்லை. இதனால், ராசிபுரம் நகரில் பேருந்து நிலையத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கூடும் வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் தவெக தொண்டா்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள்: மின் விநியோகம் பாதிப்பு

பொன்னேரி ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ராசிபுரத்தில் திமுக ஆட்சியில் ரூ. 50 கோடியில் சாலைகள் சீரமைப்பு: ராஜேஸ்குமாா் எம்.பி.
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

