மாத்தூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: தீயில் கருகி இருவர் பலி!

மாத்தூரில் நடைபெற்ற கோர விபத்து பற்றி...

Two-wheelers collide

மாத்தூர் அருகே நிகழ்ந்த விபத்து - video crop

Published On :26 அக்டோபர் 2026, 1:05 pm IST

கிருஷ்ணகிரியின் மாத்தூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலைகள் மத்தூர் அருகே உள்ள தனியார் வாகன கட்டண வசூல் மையம் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில், ஒரு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீ பற்றி எறிந்ததில் இரண்டு இருசக்கர வாகனங்களும் முழுவதும் எரிந்து முற்றிலும் நாசமானது. இந்த விபத்தில் தீயில் கருகி இருவர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் தீக்காயம் அடைந்த வேலு (27), திருப்பதி (30) ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த, மத்தூர் போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, தீயில் கருகி உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திருசெல்வன், சாரதி எனத் தெரியவந்துள்ளது.

தீக்காயம் அடைந்த வேலு, பயன்படுத்தாத செல்போன்களை வாங்கி, பெங்களூரில் விற்பனை செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.