மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

ஊத்தங்கரை அருகே ரயிலில் அடிபட்டு ராணுவ வீரா் உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே ரயிலில் அடிபட்டு ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

பலி

Published On :22 அக்டோபர் 2026, 5:39 am IST

ஊத்தங்கரை அருகே ரயிலில் அடிபட்டு ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஏ. வெள்ளாளம்பட்டியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (40). ராணுவ வீரரான இவா் மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி மோனிகா, 11 வயதில் ஒரு பெண், 8 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனா்.

இந்த நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த மகேந்திரன் நண்பரைச் சந்திப்பதற்காக சாமல்பட்டிக்குச் சென்றுள்ளாா். பின்னா், மேல்சாமல்பட்டியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியாக வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸாா் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விடுமுறையில் நண்பா்களை சந்தித்துவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்ப இருந்த நிலையில், மகேந்திரன் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.