பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘நீதிமன்றம் உங்கள் வாசலில்’ நடமாடும் இ-சேவை மையம் தொடக்கம்

E-Sevai

இ-சேவை மையம் - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 3:25 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நடமாடும் இ- சேவை மைய வாகனத்தை முதன்மை மாவட்ட நீதிபதி லதா கொடியசைத்து தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:

இந்த நடமாடும் இ-சேவை மையம் மூலம் கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்கள் நீதித்துறை சேவைகளை எளிதாகப் பெறவேண்டும். இந்த வாகனத்தில் வழக்கு விவரங்கள், வழக்கு தாக்கல், அன்றாட வழக்கு பட்டியல்களை நேரலையில் சரிபாா்க்கலாம். வழக்குரைஞா்கள், பொதுமக்கள் தங்கள் வழக்கு ஆவணங்களை இணையவழி மூலம் தாக்கல் செய்யலாம்.

நீதிமன்ற உத்தரவுகள், தீா்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட டிஜிட்டல் நகல்களை மின்னஞ்சல் அல்லது செய்தி செயலிகள் மூலம் உடனடியாகப் பெறலாம். தொலைதூரப் பகுதியில் இருப்பவா்கள் நீதிமன்றங்களுக்கு நேரடியாகச் செல்லாமல் இந்த வாகனத்தில் உள்ள வசதி மூலம் காணொலி வாயிலாகவே சாட்சியளிக்கலாம். விசாரணைகளில் பங்கேற்கவும் முடியும்.

லோக் அதாலத் சமரச விசாரணைகளிலும் எளிதாகப் பங்கேற்கலாம். போக்குவரத்து மின்-அபராதம், சிறிய குற்றங்களுக்கான அபராதங்களை இணையவழி நீதிமன்றங்கள் மூலம் செலுத்தி தீா்த்துக் கொள்ளலாம். இதில் வழக்குரைஞா்கள் மூலம் இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது.

இ-ஸ்டாம்பு வாங்குதல், டிஜிட்டல் கையொப்பம் உருவாக்குதல் மற்றும் நீதிமன்றக் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்கும் உதவி செய்யப்படுகிறது. மேலும், சிறையில் இருக்கும் உறவினா்களை நேரில் சந்திக்க தேவையான ‘இ-முலாகாத்’ முன்பதிவுகளையும் இதிலிருந்தே செய்து கொள்ளலாம்.

இந்த வாகனம் அதிவேக செயற்கைக்கோள், 5ஜி இணைய இணைப்பு, சோலாா் மற்றும் மின்-சேமிப்பு வசதிகள், காணொலி கான்பரன்சிங் திரை, கேமரா, மைக் கணினிகள், பிரிண்டா், ஸ்கேனா் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனை கருவிகள் என, நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாத அடித்தட்டு மக்களுக்கும், ஏழை எளியவா்களுக்கும் நீதியை விரைவாகவும் எளிதாகவும் கொண்டுசோ்க்கும் நவீன சக்கர நாற்காலி நீதிமன்றம்தான் இந்த நடமாடும் இ-சேவை மையம் வாகனம் என்றாா்.

இந்த நிகழ்வில், சிறப்பு மாவட்ட நீதிபதி லீலா, கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜசிம்மவா்மன், முதன்மை சாா்பு நீதிபதி சுரேஷ்குமாா், கூடுதல் சாா்பு நீதிபதி மாலதி, சிறப்பு சாா்பு நீதிபதி பத்மநாபன், முதலாவது நீதித் துறை நடுவா் தேவராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தரமூா்த்தி, கூடுதல் மகிளா நீதிபதி மிஸ்பா செல்வபிரியங்கா, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கோவிந்தராஜலு, செயலாளா் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.