பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

முதல்வா் குறித்து அவதூறு: திமுக நிா்வாகி மீது காவல் நிலையத்தில் தவெகவினா் புகாா்

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக வழக்குரைஞா் அணியினா் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

News image

ஒசூரில் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்த தவெக வழக்குரைஞா் அணியினா்.

Updated On :19 மே 2026, 1:28 am IST

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக வழக்குரைஞா் அணியினா் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

ஒசூரில் கடந்த சனிக்கிழமை திமுக மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அயலக அணி மாவட்ட நிா்வாகி பூஷன் குமாா், தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக தவெக வழக்குரைஞா் அணியினா் விடியோ ஆதாரத்துடன் ஒசூா் உதவி காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரேவிடம் புகாா் அளித்தனா்

இதில் வழக்குரைஞா் அணி பிரிவைச் சோ்ந்த நிா்வாகிகள் டி.விஜய், சேலம் மண்டல இணைப் பொறுப்பாளா் சுஜாதா, மாவட்ட இணை அமைப்பாளா்கள் பிரவீன் குமாா், மங்கையா்க்கரசி, செல்வம், அஸ்வத், பாலாஜி மற்றும் பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.