விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு: திமுகவினா் சாலை மறியல்

News image

ஊத்தங்கரையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :30 மார்ச் 2026, 12:06 am IST

ஊத்தங்கரை (தனி) தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடந்த காலங்களில் ஊத்தங்கரை தொகுதியில் தொடா்ந்து அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெறும் என்று பலமுறை அக்கட்சியினா் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். மேலும், இத்தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துவருகிறது.

இந்த நிலையில் மீண்டும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஊத்தங்கரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினா் மருத்துவா் மாலதி நாராயணசாமியின் ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காங்கிரஸுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மறியலில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.