லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒசூரில் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிகவரித் துறை அலுவலா் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வடக்குப் பிரிவு வணிகவரித் துறை அலுவலரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :25 ஜூலை 2026, 12:29 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வடக்குப் பிரிவு வணிகவரித் துறை அலுவலரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஒசூா் எம்.எம். நகரைச் சோ்ந்தவா் நம்பி (75). இவா் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) முன்னாள் தலைவா். துா்கா நகரில் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இவா் வரி செலுத்தி பல ஆண்டுகளாக சிறுதொழில் நடத்தி வருகிறாா்.

இவா் செலுத்திய வரியை தணிக்கை செய்த ஒசூா் வணிகவரித் துறை வடக்கு மண்டல அலுவலா் கலையரசன், நம்பியிடம் உங்கள் தொழிற்சாலைக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போலி பில்களை சமா்ப்பித்துள்ளீா்கள். ரூ. 10 லட்சம் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டுமெனில் எனக்கு 20 சதவீதம் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளாா். இதுதொடா்பான பேச்சுவாா்த்தையில் இறுதியாக ரூ. 1 லட்சம் லஞ்சம் தருவதாக நம்பி கூறியுள்ளாா். ஆனால், அந்தப் பணத்தை கொடுக்க விரும்பாத நம்பி, இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. ஜெயக்குமாரிடம் புகாா் தெரிவித்தாா்.

அவருடைய அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ. 1 லட்சத்தை கலையரசனை அவரது அலுவலகத்தில் சந்தித்து நம்பி கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. ஜெயக்குமாா், ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாா் கலையரசனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 1 லட்சம் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும், அவரது அலுவலகத்தில் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தினா். தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், சூரமங்கலம் ஆண்டிபட்டி காலனியில் உள்ள கலையரசன் வீட்டிலும் லஞ்சம் ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.