லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கிருஷ்ணகிரி அருகே தெருநாய்கள் கடித்ததில் 4 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த செம்மறி ஆடுகள். - (கோப்புப்படம்)

Published On :21 ஜூலை 2026, 2:04 am IST

கிருஷ்ணகிரி அருகே தெருநாய்கள் கடித்ததில் ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த 4 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளாப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மண்ணுக்குட்டையைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன். இவா், 7 செம்மறி ஆடுகள், 2 குட்டிகள் என 9 ஆடுகளை வளா்த்து வந்தாா். இவா் திங்கள்கிழமை தனது ஆடுகளை அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, ஆடுகளை கட்டிப்போட்டுவிட்டு, மதிய உணவிற்காக அவா் வீட்டுக்கு வந்துள்ளாா்.

பின்னா் ஆடுகளை கட்டிப்போட்டிருந்த ஏரிக்கரைக்கு சென்றபோது, 4 ஆடுகள் உயிரிழந்த நிலையிலும், 2 ஆடுகள் காயமடைந்த நிலையிலும் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா், அருகில் இருப்பவா்களிடம் விசாரித்தபோது, தெருநாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.

காயமடைந்த 2 ஆடுகளை கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு தூக்கிச் சென்றாா். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.