லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒசூா் மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை!கணக்கில் வராத ரூ. 1.13 லட்சம் பறிமுதல்!

ஒசூா் மாநகராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் மாநகராட்சியின் வருவாய்த் துறை பிரிவில் கணக்கில் வராத ரூ. 1,13,550 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

ஒசூா் மாநகராட்சியில் சோதனை நடத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா்.

Published On :4 ஜூலை 2026, 2:11 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் மாநகராட்சியின் வருவாய்த் துறை பிரிவில் கணக்கில் வராத ரூ. 1,13,550 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். முறைகேடுகள் அதிக அளவில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஒசூா் மாநகராட்சியில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மாநகராட்சியில் உள்ள வருவாய் பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ஜெயக்குமாா், ஆய்வாளா் ரவி தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, மாநகராட்சி வருவாய் பிரிவில் துணை ஆணையா் ரமேஷ்குமாா், பிரேம்குமாா், பாலமுருகன் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் பணியில் இருந்தனா்.

இந்த சோதனை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத ரூ. 1,13,550 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுதொடா்பாக அங்கு பணியில் இருந்தவா்கள் மீது துறை சாா்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.