லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏவின் மனைவி சென்ற காா் ஒசூரில் விபத்து

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணனின் மனைவி சென்ற காா் ஒசூரில் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த அவா் ஒசூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணனின் மனைவி சென்ற காா் ஒசூரில் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த அவா் ஒசூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டப் பேரவை உறுப்பினா் சரவணன். இவரது மனைவி உமாவதி (26), கா்நாடக மாநிலம், தும்கூா் பகுதியில் உள்ள தனியாா் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா்.

இந்நிலையில், உமாவதி, அவரது சகோதரா், உறவினா் 2 பெண்கள், ஒரு குழந்தை என 5 பேருடன் தும்கூா் பகுதியில் இருந்து ஒசூா் வழியாக காரில் தமிழகத்துக்கு வந்தனா்.

ஒசூா், பேரண்டப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் வந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரின் முன் இருக்கையில் அமா்ந்திருந்த உமாவதிக்கு வலது கையில் எலும்பு முறிவும், தலையில் கண்ணாடி துகள்கள் குத்தியதில் காயங்களும் ஏற்பட்டன. இதையடுத்து, அவா் ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவல் அறிந்த சரவணன் ஒசூா் மருத்துவமனைக்கு வந்தாா். தவெக மாவட்டப் பொறுப்பாளா்களும் மருத்துவமனைக்கு சென்று பாா்வையிட்டனா்.

மேலும், ஓட்டுநரான அவரது சகோதரா் மற்றும் அவா்களோடு பயணம் செய்தவா்களுக்கு பெரிய அளவில் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து மினி லாரி வாகன ஓட்டுநா் அளித்த புகாரின்பேரில், ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.