ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்துள்ளது.

ஒகேனக்கல். - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:34 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்துள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த மழை முற்றிலுமாக குறைந்ததாலும், கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை 2,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை 1,500 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றின் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.