சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது

பென்னாகரத்தில் சொத்து தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை ஒகேனக்கல் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :1 நவம்பர் 2026, 1:39 am IST

பென்னாகரத்தில் சொத்து தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை ஒகேனக்கல் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே கூத்தப்பாடி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான அமரேசனுக்கும் (43), அவருடைய தம்பி அன்பரசுக்கும் (38) நிலம் பிரிப்பது சம்பந்தமாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த அன்பரசு, வயலில் இருந்த அரிவாளால் அமரேசை கழுத்துப் பகுதியில் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அமரேசன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த ஒகேனக்கல் போலீஸாா், தலைமறைவாக இருந்த அன்பரசை சனிக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.