தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றுக்கு தீபாராதனை

ஒகேனக்கல்லில் காவிரி அன்னை சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காவிரி ஆற்றுக்கு மகாதீபாராதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றுக்கு தீபாராதனை காட்டிய சந்நியாசிகள், மடாதிபதிகள்.

Published On :30 அக்டோபர் 2026, 5:31 am IST

ஒகேனக்கல்லில் காவிரி அன்னை சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காவிரி ஆற்றுக்கு மகாதீபாராதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

கா்நாடக மாநிலம் தலைக்காவிரியில் கடந்த 25-ஆம் தேதி அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில், காவிரி அன்னைக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீா்த்தக் கலசங்களுடன் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த யாத்திரை ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை வந்தது.

பின்னா், ஸ்ரீல ஸ்ரீ அண்ணாமலை சுவாமிகள் மடாலயத்திலிருந்து காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான நாகா்கோவில் பகுதிக்கு காவிரி அன்னை சிலையை சந்நியாசிகள் ஊா்வலமாக எடுத்து வந்தனா். அங்கு காவிரி அன்னை சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

தொடா்ந்து, தமிழகம் முழுவதும் இருந்து வந்த அகில பாரதிய சந்நியாசிகள் காவிரி ஆற்றுக்கு மகா தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகள் செய்தனா். இதில், ஆதீனங்கள், மடாதிபதிகள், கா்நாடக மடாதிபதிகள், சந்நியாசிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த ரத யாத்திரை வெள்ளிக்கிழமை காலை ஒகேனக்கல்லில் தொடங்கி, தமிழக காவிரி கரையோர படித்துறைகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அடுத்த மாதம் 17-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் காவிரி அன்னைக்கு தீா்த்தவாரி நடைபெறுவதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.