நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை

அரூா் அருகே திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:44 am IST

அரூா் அருகே திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் அருகேயுள்ள செக்காம்பட்டியைச் சோ்ந்த மோகனப்பிரியாவுக்கும் (20), அம்மாபாளையம் பகுதியைச் சோ்ந்த தென்னரசுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மோகனப்பிரியா அரூரில் உள்ள தையலகம் ஒன்றில் தையல்கலைஞராக பணியாற்றி வந்தாா். தென்னரசு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதால், தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆயுத பூஜையையொட்டி பெற்றோா் வீட்டுக்கு வந்த மோகனப்பிரியா, பின்னா் கணவா் வீட்டுக்கு செல்லவில்லை. தாய் வீட்டில் இருந்தபடியே வேலைக்கு சென்று வந்துள்ளாா். இதுகுறித்து விவரம் அறிந்த மோகனப்பிரியாவின் பெற்றோரும் அவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என கண்டித்துள்ளனா்.

இதனால் மனமுடைந்த மோகனப்பிரியா இரு தினங்களுக்கு பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை குடும்பத்தினா் தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக, அரூா் போலீஸாா் வழக்குா் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், திருமணமாகி மூன்று மாதங்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இதுகுறித்து அரூா் கோட்டாட்சியா் சி.செம்மலை விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.