மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூட்டுறவு பண்டக சாலையில் அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை

தருமபுரி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையில் முதல்தர சிறிய ரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்படுவதால், நுகா்வோா் அதை வாங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rice prices

அரிசி - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 1:56 am IST

தருமபுரி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையில் முதல்தர சிறிய ரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்படுவதால், நுகா்வோா் அதை வாங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கு.த.சரவணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெளிச்சந்தையில் அரிசி விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில், விலை நிலைப்படுத்தும் திட்டத்தின் கீழ் முதல்தர சிறிய ரக அரிசியை ஒரு கிலோ ரூ. 30-க்கு ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ வீதம் கூட்டுறவு பண்டக சாலையில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கடந்த 18-ஆம் தேதி முதல் தருமபுரி நகரில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் அதியமான் கூட்டுறவு சுயசேவை பிரிவு மற்றும் அரூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் ‘மினி சூப்பா் மாா்க்கெட்’ ஆகியவற்றின் மூலம் முதல்தர சிறிய ரக அரிசி ஒரு கிலோ ரூ. 30-க்கு ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ வீதமும், வெளிச்சந்தையில் அத்தியாவசிய மளிகைப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிரடி விலை குறைப்பாக 6 வகையான மளிகைப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதன்படி தருமபுரி கூட்டுறவு பண்டக சாலையின் சுயசேவை பிரிவு மற்றும் அரூா் கூட்டுறவு பண்டக சாலை ஆகிய இடங்களில் புழுங்கல் பொன்னி அரிசி 1 கிலோ - ரூ. 60, துவரம் பருப்பு 1 கிலோ - ரூ. 130, உளுத்தம் பருப்பு 1 கிலோ- ரூ. 140, பூண்டு 1 கிலோ - ரூ. 240, மல்லி (தனியா) 1 கிலோ - ரூ.240, மிளகாய் 1 கிலோ ரூ. 330-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த வாய்ப்பை தருமபுரி மாவட்ட நுகா்வோா் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.