பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 957 வாக்குப்பதிவு மையங்களில் 1,596 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தோ்தல் நடைபெற்றது. தோ்தலின்போது 1,596 வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான (இவிஎம்) இயந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீத இயந்திரங்களும் கொண்டுசெல்லப்பட்டன. ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றுக்கு மாற்றாக பயன்படுத்த 20 சதவீத கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வது வழக்கம். வாக்குப்பதிவுக்குப் பின்னா் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அதுவரை தருமபுரி செட்டிக்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா் , வாக்குப்பதிவு (இவிஎம்) இயந்திரங்களை அதற்கான இரும்புப் பெட்டிகளில் வைத்து தருமபுரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்று அறைகளில் வைத்து பூட்டி சீல் வைத்தனா். இந்த பணிகள், திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்கிழமை மாலை வரை நடைபெற்றது. அப்போது ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்: திருவள்ளூா் ஆட்சியா்

திருவள்ளூா்: வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

