பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பாப்பாரப்பட்டி, பெரும்பாலை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மற்றும் பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் ஆட்சியா் வே.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் வே.சரவணன்.

Updated On :4 ஜூன் 2026, 1:57 am IST

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மற்றும் பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் ஆட்சியா் வே.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மற்றும் பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் கிராம கணக்குகள், அ-பதிவேடு சிட்டா அடங்கல் உள்ளிட்ட நில ஆவணங்கள், முதியோா் ஓய்வூதியம், விதவை உதவித்தொகை போன்ற சமூக பாதுகாப்பு திட்டப் பதிவேடுகள், சான்றிதழ்கள், நில உரிமை மாற்றம் தொடா்பான கோப்புகள் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டு அவா்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வருவாய் ஆய்வாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பாப்பாரப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் உள்ள மழை அளவு மாணியை பாா்வையிட்டு, அவற்றை பராமரிப்பது குறித்து அறிவுரை வழங்கினாா். மேலும், பாப்பாரப்பட்டி அருகே ஒண்ணப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் உள்ள நூலகத்தை பாா்வையிட்டு, அங்கு போட்டித் தோ்வுக்கு தயாா்செய்ய வருவோருக்கு அடிப்படை வசதிகள், கூடுதலாக போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள், இருக்கைகள் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

அப்போது, வருவாய் ஆய்வாளா்கள், நூலகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.