தருமபுரி ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் 455 மனுக்கள் வரப்பெற்றன.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அளிக்கப்பட்ட 455 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு பரிந்துரைத்தாா்.
இதில், கம்பைநல்லூா் பகுதியில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக் கடைகள், பாகல அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள மதுக்கடை உள்ளிட்டவற்றை அகற்றக் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கவிதா, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரூபன்சங்கா் ராஜ், மகளிா் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், தனித்துணை ஆட்சியா் மு.செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பெ.கி.கோவிந்தன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

குறைதீா் கூட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை: அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியா் உத்தரவு

சிவகங்கை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 295 மனுக்கள் அளிப்பு

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 324 மனுக்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

