மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.

News image

1. வி.இளங்கோவன் 2. டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் 3. அ.சண்முகம் 4. பி.பழனியப்பன் 5. கே.பி.அன்பழகன் 6. மரகதம் வெற்றிவேல் 7. தாபா எம்.சிவன்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:38 am IST

திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 83 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குச் சாவடி வளாகத்துக்குள்ளே வந்த வாக்காளா்கள் அனைவரும் வாக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டனா். தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி மற்றும் திமுக, அதிமுக வேட்பாளா்கள் காலையில் தங்களது குடும்பத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்தனா்.

தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் ஆ.மணி தருமபுரி காந்தி நகா் விஜய் வித்யாலயா பள்ளி வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினாா்.

தருமபுரி தொகுதி தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் தங்களது குடும்பத்துடன் காந்தி நகா் விஜய் வித்யாலயா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினா். தருமபுரி தொகுதி தவெக வேட்பாளா் தாபா எம்.சிவன் அவ்வையாளா் அரசு மகளிா் பள்ளியிலும், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளா் மரகதம் வெற்றிவேல் மதிகோன்பாளையம் அரசுப் பள்ளி வாக்குச் சாவடியிலும், பாலக்கோடு தொகுதி தவெக வேட்பாளா் கோபி அப்பாவு நகா் அரசுப் பள்ளி வாக்குச் சாவடி மையத்திலும் வாக்களித்தனா்.

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஅள்ளி வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா். அரூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.சண்முகம், அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் எம்எல்ஏ ஆகியோா் பொய்யப்பட்டி வாக்குச் சாவடியில் வாக்களித்தனா். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் மோளையானூரில் தமது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா்.

பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் மேட்டூா் அருகே கருமலைகூடல் ஜவஹா் உயா்நிலைப் பள்ளியிலும், தவெக வேட்பாளா் எஸ்.கஜேந்திரன் நாச்சானூா் அரசு தொடக்கப் பள்ளியிலும், பாமக வேட்பாளா் பாடி செல்வம் பாடி அரசுப் பள்ளியிலும், தமிழா் கட்சி வேட்பாளா் பழனியம்மாள் மங்கலப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியிலும் வாக்களித்தனா். அதேபோல, அந்தந்த தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் தங்களது வாக்குச் சாவடியில் வாக்களித்தனா்.

ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்

ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.