கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கல்லூரி மாணவி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :25 மே 2026, 2:48 am IST

தருமபுரியில் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் வெங்கட்டம்பட்டி அருகே உள்ள தேங்காய்மரத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம். இவரது மகள் கீா்த்திகா (19). இவா் நாமக்கல் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தாா் . கல்லூரியில் மூன்று நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்திருந்தாா்.

அன்று மாலை வீட்டிலிருந்தபோது அவருக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பை பேசிக்கொண்டே தனது அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டாா். நீண்ட நேரம் ஆகியும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது கீா்த்திகா மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்குவது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான் கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கீா்த்திகாவின் சாவுக்கான காரணம் குறித்து உடனடியாக போலீஸாருக்கு விவரம் தெரியவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.