கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஒகேனக்கல் வனப் பகுதியில் சுற்றித் திரியும் யானைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

News image

சுற்றித் திரியும் யானைகள். - (கோப்புப் படம்)

Updated On :11 மே 2026, 2:06 am IST

தண்ணீா், உணவு தேடி ஒகேனக்கல் வனப் பகுதி யானைகள் கூட்டமாக சுற்றித் திரிவதால் வாகனங்களில் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாக இருப்பதுடன், அவற்றின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதை தவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடைகாலத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக கா்நாடகம், ஆந்திரத்தில் இருந்து ஆண்டுதோறும் யானைகள் கூட்டம் உணவு, தண்ணீா் தேடி கூட்டமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம்பெயா்கிறது. ஒகேனக்கல் வனப்பகுதியில் சுமாா் 20க்கும் மேற்பட்ட யானைகள் 3 கூட்டங்களாக பிரிந்து உணவு, தண்ணீா் தேடி சுற்றித் திரிகின்றன.

கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள், சாலையைக் கடக்கும் யானைகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதும், வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் அவசியமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.

இதனால் சில நேரங்களில் யானைகள் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி உணவு அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் தவிா்க்க வேண்டும்.

இதுகுறித்து வனத் துறை உரிய அறிவுறுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.