தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விவசாயி கொலை வழக்கில் மற்றொரு விவசாயிக்கு ஆயுள் தண்டனை

News image

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 1:55 am IST

தருமபுரி அருகே நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த மற்றொரு விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பெரும்பாலை அருகே உள்ள கோவள்ளி கோம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (50), விவசாயி. இவருக்கு மனைவி, இரு மகள்கள், மகன் உள்ளனா். அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு விவசாயி குபேந்திரன் (42). இவா்களுக்கு இடையே வீட்டருகே உள்ள பொதுவழி தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடா்பாக இருதரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுட்டு வந்தனா்.

இந்நிலையில், கடந்த 2022 மே மாதம் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன் தொடா்ச்சியாக, மே 29-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற கந்தசாமியை வழிமறித்த குபேந்திரன், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்து கீழேவிழுந்த கந்தசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். குபேந்திரன் தப்பியோடினாா். இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து குபேந்திரனை கைதுசெய்தனா்.

தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு குபேந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சக்திவேல் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.