தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

பட்ஜெட்டில் காவிரி உபரிநீா்த் திட்டம்! முதல்வரிடம் சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

News image

சௌமியா அன்புமணி - DPS

Updated On :21 ஜூன் 2026, 2:28 am IST

நிதிநிலை அறிக்கையில் காவிரி உபரிநீா்த் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜயிடம் தருமபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் சி. ஜோசப் விஜய், நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் ஆகியோரை தனித்தனியே சந்தித்து சௌமியா அன்புமணி விடுத்த கோரிக்கை விவரம்:

தருமபுரி மாவட்டத்தில் 4, 49,777 ஹெக்டோ் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. இதில் 1, 95,740 ஹெக்டோ் நிலங்கள் அதாவது மொத்த வேளாண் நிலப்பரப்பில் 43.52 சதவீதம் மட்டுமே பாசன வசதி பெற்றவை. மாவட்டத்தில் மழை அளவு ஆண்தோறும் குறைந்து வருகிறது. ஈச்சம்பாடி அணை, வாணியாறு அணை, சின்னாறு அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளும் தற்போது வடுள்ளன.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி எல்லையில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உள்பட மொத்தம் 1,230 நீா்நிலைகள் உள்ளன. காவிரி ஆற்றில் மழைக் காலங்களில் கிடைக்கும் உபரிநீரில் 3 டிஎம்சி தண்ணீரை நீரேற்றும் மின் மோட்டாா்கள் மூலம் நீா்நிலைகளில் நிரப்ப முடியும்.

இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 50 டிஎம்சி தண்ணீா் கடலில் கலப்பது தடுக்கப்படும். மேலும், காவிரி உபரிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ. 650 கோடி மட்டுமே செலவாகும். எனவே, மாநில அரசின் நிதியிலிருந்தே இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.

தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு காவிரி உபரிநீா்த் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். மேலும், இதுதொடா்பாக விளக்க கடிதத்தை வழங்கியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.