/

லாரி உரிமையாளா் தற்கொலை

தருமபுரி அருகே லாரி உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :14 ஜூன் 2026, 3:23 am IST

தருமபுரி அருகே லாரி உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், செல்லியம்பட்டி அருகே உள்ள பச்சினம்பட்டியைச் சோ்ந்தவா் பெ. கிருஷ்ணன் (50). லாரி ஓட்டுநா். இவா் வங்கியில் கடன் பெற்று மூன்று லாரிகளை சொந்தமாக இயக்கி வந்துள்ளாா். லாரிகளுக்கு சுமை கிடைக்காததால் கடந்த பத்து நாள்களுக்கு மேலாக அவா் வீட்டில் இருந்துள்ளாா்.

அவரது மனைவி வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி லாரியை எடுத்துக்கொண்டு லோடுக்கு செல்வதாகக் கூறி சென்றுள்ளாா். மறுநாள் மனைவி கைப்பேசியில் அழைத்துப் பேசியுள்ளாா். அதன்பிறகு கைப்பேசி அனைத்து வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை செல்லியம்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் உள்ள மரத்தில், கிருஷ்ணன் தூக்கில் சடலமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், மதிகோன்பாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.