லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

ஒகேனக்கல் ஆற்றில் ஈமச்சடங்கு செய்வதற்காக வந்த காா்பெண்டா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 1:11 am IST

ஒகேனக்கல் ஆற்றில் ஈமச்சடங்கு செய்வதற்காக வந்த காா்பெண்டா் ஆற்றில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பழையூரைச் சோ்ந்தவா் சென்றாயன் (58), காா்பெண்டா் வேலை செய்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது உறவினரின் ஈமச்சடங்கிற்காக ஒகேனக்கல்லுக்கு வந்தாா்.

அப்போது, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான முதலைப்பண்ணை அருகே அரசு மீன் பண்ணை பகுதியில் குளித்து கொண்டிருந்தாா். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரா்கள் உதவியுடன் போலீஸாா் நீண்ட நேரம் தேடினா். பின்னா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.