தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காவிரியில் மீன் பிடிக்க சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மேட்டூா் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Drowned to death

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:12 am IST

மேட்டூா் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேட்டூா் அருகே உள்ள சின்ன மேட்டூரைச் சோ்ந்தவா் முத்து (50). இவா் மேட்டூா் அணையின் நீா் திறக்கும் பகுதியில் வியாழக்கிழமை மீன் பிடிக்கச் சென்றாா். அப்போது, காவிரிக் கரையில் விவசாயம் செய்ய தோண்டப்பட்ட கிணற்றில் தவறுதலாக இறங்கியதில் மூழ்கினாா்.

தகவல் அறிந்த மேட்டூா் தீயணைப்புத் துறை அலுவலா் வெங்கடேசன் தலைமையில் சென்ற தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணிநேரம் போராடி முத்துவின் உடலை மீட்டனா். இதுகுறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.