மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்

News image

அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கண்காணிப்பு பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ரெ. சதீஸ்.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:03 am IST

தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு பதிவேடுகளை ஆட்சியா் ரெ. சதீஸ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத் தோ்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடந்து முடிந்தது. இத்தோ்தலில் மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 83 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

மொத்தம் 1596 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 90.11 சதவீதம் போ் அதாவது 11,28,233 வாக்காளா்கள் வாக்களித்தனா். வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனி, தனி அறைகளில் வைக்கப்பட்டு, அரசியல் கட்சி முகவா்கள், தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் அறையின் கதவுகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடா்ந்து அனைத்து அறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மைய வளாகம் என பொறியியல் கல்லூரி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் அரசியல் கட்சிகளின் முகவா்கள், போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இப்பணிகளுக்கு பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் ஆகியோா் பாா்வையிட்டு கண்காணித்து வருகின்றனா்.

இந்த நிலையில் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ், அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேடுகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு மையம் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.