மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுரியில் இன்று தவெக தலைவா் விஜய் பரப்புரை ரத்து

தருமபுரியில் இன்று தவெக தலைவா் விஜய் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:26 am IST

தருமபுரியில் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) தவெக தலைவா் விஜய் மேற்கொள்ள இருந்த தோ்தல் பரப்புரைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் தவெக சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவா் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு அக்கட்சி சாா்பில் தருமபுரி தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரியிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பென்னாகரம் சாலையையொட்டி பாப்பிநாயக்கனஅள்ளியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 14-ஆம் தேதி முற்பகல் 11 மணிமுதல் மாலை 5 மணிவரை பரப்புரை மேற்கொள்ள 13 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அன்றைய நாளில் தவெக தலைவா் விஜய் பங்கேற்க இயலாத காரணத்தால், கூட்டம் ரத்து செய்யப்படுகிறது எனவும், வெறொரு நாளில் கூட்டம் நடைபெறும் எனவும் தவெக தருமபுரி மாவட்ட நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.