மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தருமபுரி அருகே வரதட்சிணை கேட்டு கொடுமை செய்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 2:10 am IST

தருமபுரி அருகே வரதட்சிணை கேட்டு கொடுமை செய்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், பெரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் (34). சரக்கு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவருடைய மனைவி முத்துலட்சுமி (24). வரதட்சிணை தொடா்பாக தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியிலிருந்த முத்துலட்சுமி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிக்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு விசாரணைகள், வாதம் பிரதிவாதம் முடிவுற்ற நிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், பிரபாகரன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜீவநந்தினி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் நந்திவா்மன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.