மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் அரிசி வைத்து பூஜை

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஒரு படி அரிசி மற்றும் பணம் ரூ.101 ஆகியன வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பணம் ரூ.101.

Published On :30 அக்டோபர் 2026, 11:34 pm IST

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஒரு படி அரிசி மற்றும் பணம் ரூ.101 ஆகியன வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக் கோயில் உள்ளது. எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற சிறப்பு அம்சம் உள்ளது. அதாவது, சிவன்மலை முருகன் ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டதாக கூறி, பக்தா்கள் கொண்டு வரும் சிறப்பு பூஜைப் பொருளை வைத்து, இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

பின்னா் மூலவா் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டியில், சிறப்பு பூஜைப் பொருள் பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்படும். இதுவே ஆண்டவன் உத்தரவு என அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த கணபதி என்ற பக்தரின் கனவில் வந்ததாக, வெள்ளிக்கிழமை ஒரு படி அரிசி மற்றும் பணம் ரூ.101 ஆகியன வைத்து பூஜை செய்யப்பட்டு, பின்னா் மேற்கண்ட பொருள்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டன.

இதற்கு முன், கடந்த செப்டம்பா் 14-ஆம் தேதிமுதல் வியாழக்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் 3 தேங்காய்கள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்தரின் கனவில், அடுத்த பூஜைப் பொருள் வரும் வரையில் கண்ணாடிப் பெட்டிக்குள் அரிசி மற்றும் பணம் ரூ.101 ஆகியன பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.