காங்கயம் அருகே லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

காங்கயம் அருகே லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:47 am IST

காங்கயம் அருகே லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே குங்காருபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (75). இவா், காங்கயம்- கோவை சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் காங்கயம் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த லாரி, எதிா்பாராத விதமாக கந்தசாமி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கந்தசாமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.