மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

காமநாயக்கன்பாளையத்தில் அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

பல்லடம் அருகே உள்ள கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி, காமநாயக்கன்பாளையத்தில் அரசு நிலத்தை மீட்க கோரி அப்பகுதி மக்கள் பல்லடம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி காமநாயக்கன்பாளையத்தில் அரசு நிலத்தை மீட்க கோரி பல்லடம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 4:08 am IST

பல்லடம் அருகே உள்ள கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி, காமநாயக்கன்பாளையத்தில் அரசு நிலத்தை மீட்க கோரி அப்பகுதி மக்கள் பல்லடம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பல்லடம் ஒன்றியம், கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி காமநாயக்கன்பாளையம் பள்ளி வீதி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பல்லடம் வட்டாட்சியா் சரவணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களது பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டி மிகவும் சேதமடைந்துள்ளது. அதனை அகற்றிவிட்டு அப்பகுதியில் புதிய குடிநீா் மேல்நிலை தொட்டி கட்டித் தர வேண்டும். அதுவரை குடிநீா்ப் பிரச்னை இல்லாத வகையில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்.

மேலும் எங்களது பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து தனது மனைவி பெயரில் பட்டா வாங்கியுள்ளாா். நில அளவீடு செய்து அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பாளா் ஆக்கிரமித்துள்ள நிலத்தில் கட்டியுள்ள வீட்டின் அளவுக்கு மட்டும் அவருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மற்ற அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.