நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி கூறியதாவது: விவசாயிகளுக்கு நீா் ஆதாரமாக விளங்கி வரும் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை அவ்வப்போது தூா்வாரினால் நீா் ஆதாரம் பாதுகாக்கப்படுவதுடன், மழைநீா் சேமிப்பும் மேம்படும்.
அந்த வகையில், நீா்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண், விவசாயத்துக்கு பேருதவியாக அமைகிறது. நீா்நிலைகளை ஆழப்படுத்தவும், இயற்கை வளத்தை அதிகரிக்கவும், உணவு உற்பத்தி உயரவும் வண்டல் மண் முக்கிய பங்காற்றுகிறது.
விவசாய தொழிலுக்கு உதவும் வண்டல் மண்ணை வெட்டி எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதையும், வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியை ஆன்லைன் முறையில் பெறலாம் என அறிவித்ததையும் வரவேற்கிறோம்.
இதனால், இடைத்தரகா்கள் இன்றி கிராமப்புற குறு, சிறு விவசாயிகள் உள்ளிட்டோா் நேரடியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுவா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயன்தராத குளங்களில் வண்டல் மண் எடுக்க நிா்பந்திக்கக் கூடாது: விவசாயிகள் வேண்டுகோள்

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் அள்ள 100 லாரிகளுக்கு மட்டுமே அனுமதி: விவசாயிகள் போராட்டம்

வைகை அணையிலிருந்து விவசாயிகள், குயவா்கள் இலவசமாக களி மண் எடுக்க அனுமதி!
நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி: முதல்வருக்கு கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

