திருப்பூரில் பிசியோதெரபிஸ்ட்டை தாக்கி நகை, இருசக்கர வாகனத்தைப் பறித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா், அனுப்பா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் 27 வயது நபா். பிசியோதெரபிஸ்ட்டான இவரின் கைப்பேசிக்கு இளைஞா் ஒருவரிடம் இருந்து அண்மையில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பேசிய நபா் தனிமையில் சந்திக்கலாம் எனக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய அவா், அந்த இளைஞா் கூறியபடி கருவம்பாளையம் அருகேயுள்ள நொய்யல் ஆற்றங்கரையோர பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சம்பத்தன்று இரவு சென்றுள்ளாா். அப்போது, அங்கு சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளைஞா் நின்று கொண்டிருந்துள்ளாா். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, புதருக்குள் மறைந்திருந்த 3 போ் திடீரென அவரை சூழ்ந்துக் கொண்டனா்.
பின்னா், அவரைத் தாக்கியதுடன், கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனத்தைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மத்திய காவல் நிலையத்தில் பிசியோதெரபிஸ்ட் புகாா் அளித்தாா், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கருவம்பாளையம் மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
மேலப்பாளையத்தில் மருத்துவரைத் தாக்கி சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

