பல்லடம் அருகே காளிநாதம்பாளையத்தில் கோடையிலும் குளத்தில் நீா் நிரம்பி காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தின் பிரதான நீராதாரமாக திருமூா்த்தி, அமராவதி ஆகிய அணைகள் உள்ளன.
இதில் திருமூா்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி வாய்க்கால் வழியாக வரும் தண்ணீா் மூலம் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. விவசாயிகள் சின்ன வெங்காயம், தக்காளி, மக்காச்சோளம், மஞ்சள் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்நிலையில் பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீரை வீணாக்காமல், கரைப்புதூா் ஊராட்சி காளிநாதம்பாளையம் குளத்தில் விவசாயிகள் தேக்கி வைத்துள்ளனா். இதனால் தற்போது அந்த குளம் தண்ணீா் ததும்பி நிற்கிறது. இதுமட்டுமின்றி காளிநாதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமாா் 3 கிலோமீட்டா் தொலைவுக்கு உள்ள கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. கிணறுகளிலும் போதுமான தண்ணீா் கிடைப்பதால் விவசாயம் தடையின்றி நடைபெறுகிறது. மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடும் ஏற்படுவதில்லை.
தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில் அந்த பகுதியில் நீா்த் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உருவாகியுள்ளது. இது போன்று மற்ற பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்கால் நீரை வீணாக்காமல் குளங்களில் தேக்கிவைக்கும் போது நிலத்தடிநீா்மட்டம் உயா்ந்து விவசாயம் செழிப்பாக இருக்கும். குடிநீா் தட்டுப்பாடும் ஏற்படாது என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்களுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

சொட்டு நீா் பாசனத்துக்கு 100% மானியம்: விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க அழைப்பு

நீண்ட காலப் பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்படுத்துவாரா புதிய ஆட்சியா்? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

மன்னாா்குடியில் பாசிபடா்ந்த குளம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

