தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருப்பூா், அவிநாசியில் ரூ. 2.32 லட்சம் பறிமுதல்

திருப்பூா், அவிநாசி பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.32 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 1:19 am IST

திருப்பூா், அவிநாசி பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.32 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் (வடக்கு) சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 15வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் முகமது அனஸ் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் பனியன் நிறுவன உரிமையாளரான நவீன் (33) உரிய ஆவணங்களின்றி ரூ.ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 50 வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்பாா்வையாளா் சிவசக்தி முன்னிலையில் ஒப்படைத்தனா்.

இதேபோல அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அன்னூரில் பெரியபுத்தூா் சாலை, பொகலூா் பிரிவு-பிராட்டியம்மன் கோயில் அருகே பறக்கும்படை அலுவலா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் மணிமேகலை ஆகியோரை கொண்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த அன்னூா் சாலையூா் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் மயில்சாமி என்பவரிடம் சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ.71ஆயிரத்து 500 எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னிலையில் அவிநாசி கருவூலத்தில் செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.