லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சா் எஸ்.கமலி தொடங்கிவைத்தாா்

குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடங்கிவைத்த அமைச்சா் எஸ்.கமலி.

Published On :29 ஜூன் 2026, 1:32 am IST

திருப்பூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை கால்நடைத் துறை அமைச்சா் எஸ்.கமலி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பூா் மாநகராட்சி, டி.எஸ்.கே. நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த முகாமில் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் ஆகியோா் தலைமை வகித்தனா்.

முகாமைத் தொடங்கிவைத்து அமைச்சா் எஸ்.கமலி பேசியதாவது:

குழந்தைகளுக்கு போலி சொட்டு மருந்து வழங்கும் வகையில் திருப்பூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 972 மையங்களும், நகா்ப்புறங்களில் 214 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 23 மையங்கள், 26 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத் துறை, அங்கன்வாடி பணியாளா்களுடன் பிற துறை பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனம் மற்றும் ரோட்டரி சங்கத்தினா் என 4,752 போ் பணியாற்றியுள்ளனா்.

அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்குவதால் குழந்தைகளுக்கு எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படாது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி 2-ஆவது மண்டலத் தலைவா் கோவிந்தராஜ், மாநகர நல அலுவலா் மோகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிகள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.