திருமுருகன்பூண்டி 10 ஆவது வாா்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு கால்வாய் அடைப்பால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியம் கூறியதாவது:
10-ங்வது வாா்டு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பல லட்சம் மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணியின்போது தொட்டி இடிந்து விழுந்தது.
இதையடுத்து மழைக்காலங்களில் முறையாக தண்ணீா் வெளியேறும் வகையில் தரமான முறையில் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்வதற்காக தொட்டி முழுவதும் செடிகள் நடப்பட்டுள்ளன. ஆனால் கழிவுகள் வெளியேறாமல் கால்வாயில் வலை அமைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குண்டடம் அருகே பொதுப் பாதையில் பள்ளம்: கழிவுநீா் தேங்குவதால் சுகாதார சீா்கேடு

செயல்படாத கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை - மாநகராட்சி ஆணையா் உத்தரவு

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

விதிகளை மீறி இயக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை: அமைச்சா் ராஜீவ் எச்சரிக்கை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

