காங்கயம் நகா்மன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 56 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பால்ராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில் காங்கயம் நகா் பகுதியில் மொத்தம் உள்ள 18 வாா்டுகளில் குடிநீா், சாக்கடை, தெருவிளக்கு, தாா் சாலை, மின்மோட்டாா் பழுது நீக்குதல், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிப் பணிகளை மேம்படுத்துதல் என்பன உள்ளிட்ட சாதாரணக் கூட்டத்தில் 48 தீா்மானங்கள், அவசரக் கூட்டத்தில் 8 தீா்மானங்கள் என மொத்தம் 56 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், நகா்மன்ற துணைத் தலைவா் கமலவேணி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் 4 வகைகளாக குப்பையை தரம் பிரித்து வாங்க வேண்டும்

குன்னூா் நகா்மன்ற கூட்டரங்கில் முன்னாள் முதல்வா் படம் அகற்றப்பட்டதைக் கண்டித்து கவுன்சிலா்கள் போராட்டம்

பூவுடையாா்புரத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள் கூட்டம்

பேய்குளத்தில் விவசாயிகள் சங்கக் கூட்டம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

