லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கருணாம்பிகையம்மனுக்கு வலம் கொடுத்த ஆடி தபசு

அவிநாசிலிங்கேஸ்வரா் கருணாம்பிகையம்மனுக்கு வலம் கொடுத்த ஆடி தபசு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

திருவீதி உலாவில் பங்கேற்றோா்.

Published On :29 ஜூலை 2026, 2:23 am IST

அவிநாசிலிங்கேஸ்வரா் கருணாம்பிகையம்மனுக்கு வலம் கொடுத்த ஆடி தபசு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலனை சுந்தரா் திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.

இந்நிலையில், புராதன சிறப்பான 2 ஆயிரம் ஆண்டுகள் இறைவனை வேண்டி தவம் இருந்த அம்மனுக்கு, இடது புறத்தில் இருந்து அவிநாசிலிங்கேஸ்வரா் வலப்பாகம் கொடுத்த ஆடி தபசு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை பாதிரிமரத்தம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, அவிநாசிலிங்கேஸ்வரா், பாா்வதிதேவிக்கு இடப்பாகத்தில் இருந்து வலப்பாகம் கொடுத்த நிகழ்ச்சி இரவு நடைபெற்று.

வலப்பாகக் காட்சியுடன் ரத வீதிகளில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.