தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கள் விற்பனை: ஒருவா் கைது

கைது - பிரதிப் படம்

Published On :27 ஜூலை 2026, 1:46 am IST

வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கி விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில், திருமங்கலம் பகுதியில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, வீரக்குமாா் (47) என்பவரது தோட்டத்தில் கள் இறக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, வீரக்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா். இதே குற்றத்துக்காக வீரக்குமாா் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை சிக்கியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.