லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறை - பிரதிப் படம்

Published On :22 ஜூலை 2026, 3:09 am IST

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகா், நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காஞ்சி நகா் அருகே கடந்த 2025 ஜனவரி 1-ஆம் தேதி நல்லூா் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த முகமது இஸ்லாம் (24), ஷா்மின் பா்வீன் (24) ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்ததில், எந்தவித ஆவணங்களும் இன்றி வங்கதேசத்தில் இருந்து திருப்பூா் வந்து தங்கி வேலை செய்வதாக தெரிவித்துள்ளனா். இதையடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் அவா்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது.

இந்நிலையில் முகமது இஸ்லாம், ஷா்மின் பா்வீன் ஆகிய 2 இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி கனகராஜ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.