லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெருமாநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

கோப்புப் படம்

Published On :18 ஜூலை 2026, 12:04 am IST

பெருமாநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகேயுள்ள பரமசிவம்பாளையத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஹாசன் ஆபிப் (26), ஹோஷேன் (34) ஆகியோரை பெருமாநல்லூா் போலீஸாா் கடந்த 2024 ஏப்ரல் 30-ஆம் தேதி கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.28 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.