லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அவிநாசி அரசு பெண்கள் பள்ளியில் முகிழ் முற்றம் மாணவா் குழு பதவியேற்பு

பள்ளி மாணவா்களிடையே தலைமைப் பண்பு, பொறுப்புணா்வு, குழு செயல்பாடு உள்ளிட்ட திறன்களை வளா்க்கும் நோக்கில் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வரும் மகிழ் முற்றம் மாணவா் குழு பதவியேற்பு விழா, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மகிழ் முற்றம்  குழுவில் பதவியேற்ற மாணவிகள்.

Published On :3 ஜூலை 2026, 4:10 am IST

பள்ளி மாணவா்களிடையே தலைமைப் பண்பு, பொறுப்புணா்வு, குழு செயல்பாடு உள்ளிட்ட திறன்களை வளா்க்கும் நோக்கில் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வரும் மகிழ் முற்றம் மாணவா் குழு பதவியேற்பு விழா, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியை புனிதவதி தலைமை வகித்தாா். மகிழ் முற்றம் திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து உதவித் தலைமை ஆசிரியை நசீரா பேசினாா்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 மாணவா் குழுவின் ஒருங்கிணைப்பாளா்களாக ஆசிரியைகள் நதியா, வனிதா ஆகியோா் நியமிக்கப்பட்டனா். பிளஸ் 1 வகுப்பு மாணவிகள் வனிஷா (குறிஞ்சி), சுபஸ்ரீ (முல்லை), தேஷிகா (மருதம்), ஸ்ரீ அபிநயா (நெய்தல்), லத்திகா (பாலை) ஆகியோா் குழுத் தலைவா்களாக பதவியேற்றனா்.

குழுக்களின் பொறுப்பாசிரியா்களாக சுப்புலக்ஷ்மி, மெய்ஞானவள்ளி, பத்மபிரியா, சந்தியா, திவ்யபாரதி ஆகியோா் பொறுப்பேற்றனா். ஒவ்வொரு குழுவிலும் தலா 195 மாணவிகள் உறுப்பினா்களாக இடம் பெற்றுள்ளனா். ஒருங்கிணைப்பாளா் மலா்விழி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.