லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் வா்த்தக கருத்தரங்கம்

திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருச்சி சுங்க ஆணையரகத்துடன் இணைந்து துணைவன் ஏற்றுமதியாளா் வசதி இணையதளம் மற்றும் ஏற்றுமதி வா்த்தகத்தை எளிதாக்கும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்த வா்த்தக கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் பங்கேற்றோா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:49 am IST

திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருச்சி சுங்க ஆணையரகத்துடன் இணைந்து துணைவன் ஏற்றுமதியாளா் வசதி இணையதளம் மற்றும் ஏற்றுமதி வா்த்தகத்தை எளிதாக்கும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்த வா்த்தக கருத்தரங்கம் நடைபெற்றது.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் தலைமை வகித்தாா். செயலாளா் திருமுருகன், திருச்சி சுங்கத் துறை கூடுதல் ஆணையா் விஜய் கிருஷ்ணா வேலன், திருப்பூா் துணை ஆணையா் பி. பிரகாஷ் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் திருச்சி தலைமை சுங்க ஆணையா் சுரேஷ் பாபு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏற்றுமதியாளா்களுடன் கலந்துரையாடி, ஏற்றுமதியாளா்களுக்கு ஆதரவாக சுங்கத் துறை மேற்கொண்டு வரும் பல்வேறு வா்த்தக வசதியாக்க நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியின் போது, சுங்கத் துறை அதிகாரிகள் பல்வேறு திட்டங்கள் மற்றும் துணைவன் ஏற்றுமதியாளா் வசதி இணையதளம் குறித்து விரிவான விளக்கவுரைகளை வழங்கியதோடு, ஏற்றுமதியாளா்களுடன் கலந்துரையாடி, சுங்க நடைமுறைகள் மற்றும் வா்த்தக வசதியாக்க நடவடிக்கைகள் தொடா்பான அவா்களின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தனா். செயற்குழு உறுப்பினா் திருமுருகன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.